பூசா சிறையில் இருக்கும் ஞ்சிப்பானை இம்ரானிடம் கைத் தொலைபேசி.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 3 ஜூலை, 2020

பூசா சிறையில் இருக்கும் ஞ்சிப்பானை இம்ரானிடம் கைத் தொலைபேசி....

கஞ்சிப்பானை இம்ரான் சிறை வைக்கப்பட்டுள்ள பூசா சிறையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் அவரது சிறைக் கூடத்திலிருந்து கையடக்க தொலைபேசியொன்று மீட்கப்பட்டுள்ளது.

பூசா சிறையின் பாதுகாப்புக் கடைமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம் (01) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், குறித்த கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரான், சிறை வைக்கப்பட்டுள்ள இலக்கம் 03 சிறைக் கூடத்திலிருந்து ஒரு அன்ட்ரொய்ட் வகை கையடக்க தொலைபேசி, சார்ஜர் 01, சிம் அட்டைகள் 04 ஆகியன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.