2020 பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான மூன்றாம் நாள் இன்றாகும்.
இதனடிப்படையில், இன்று (15) இரண்டாவது நாளாகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான சந்தர்ப்பம் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாளை மற்றும் நாளை மறுதினம் பாதுகாப்புப் பிரிவினரும் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
இந்த நாட்களில் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்கள் ஊடாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஏழு இலட்சத்து ஐயாயிரத்து 85 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment