அமெரிக்காவில் ஒரே நாளில் 65 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை கடந்துள்ளது.
இது அமெரிக்காவை மாத்திரமன்று முழு உலகையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ள நிலையில், அங்கு நேற்று மாத்திரம் 65 ஆயிரத்து 594 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்து 45 ஆயிரத்து 77 ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம் இந்த நோய்த்தொற்று காரணமாக ஒரேநாளில் 935 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 143 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரையில் 16 இலட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பதுடன், 18 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அவர்களில் 16 ஆயிரத்து 337 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக புள்ளிவபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment