ஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.! - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 17, 2020

ஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.!


தற்சமயம் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் ஹூவாய் பி20, ஹூவாய் பி20 பிளஸ் மற்றும் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் மார்ச் மாதம் 27-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஹூவாய் ஸ்மார்ட்போன் மாடல்கள்.
ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஐபோன் எக்ஸ் மாடல் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ்-க்கு போட்டியாக இந்த ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூவாய் பி20 லைட் : ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.

கிரின் 970 சிப்செட்: ஹூவாய் பி20, ஹூவாய் பி20 பிளஸ் மற்றும் ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் மாடல்கள் கிரின் 970 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு: ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா: இந்த ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் செங்குத்தாக டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ் மொபைலில் இதே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்: வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2900எம்ஏஎச்: ஹூவாய் பி20 லைட் ஸ்மார்ட்போனில் 2900எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.