
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்யோகப்பூர்வ வாகனத்திற்குள் இருவர் ஆபாசமான முறையில் நடந்துக்கொண்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
சமாதான படைக்கு சொந்தமான இஸ்ரேலின் டெல் அவிவீ பகுதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும் பெண் ஊழியர் ஒருவருமே இவ்வாறு ஆபாசமாக இருந்தமை காணொளியாக பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் குறித்த காணொளி தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் இன் ஊடகப்பேச்சாளர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது என்பதோடு அது தொடர்பில் விரைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment