இன்று உலக கடல் தினமாகும். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 8, 2020

இன்று உலக கடல் தினமாகும்.இன்று உலக கடல் தினமாகும். கடலைப்பாதுகாத்து அதன் இயற்கைப் பொறிமுறைகளைப் பேணுவது நம் ஒவ்வொருவரினதும் கமையாகும் என இது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்பரப்பு மிக முக்கியமானது

இப்பரப்பில் கரைவலை மாயவலை இயந்திரப் படகுகள் முதலியவைகளின் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன

கடற்றொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழுகின்றன. காத்தான்குடி மருதமுனை பச்சஒலுவில் உள்ளிட்ட கடற்கரைப்பிரதேசத்தில் மக்கள் தினமும் ஓய்வைக் கழிப்பதுடன் விஷேட தினங்களில் அதிகம் ஒன்றிணைந்து சுகம் காணுகின்றனர்

ஒலுவில்  நிந்தவூர் கடற்கரைகள் மனித செயற்பாடுகள் காரணமாகவும் கடல்நிலை வேறுபாட்டாலும் அதிகம் அரிப்புக்குள்ளாகின்றன. திட்டமிடப்படாத ஒலுவில் துறைமுக அபிவிருத்தியும் இதற்கான பிரதான காரணியாகும்

பொத்துவில் அறுகம்பை உலக அளவில் அலை சறுக்கலுக்கு வெளிநாட்டு உல்லாசத்துறைக்குப் பெயர்போனது.

இவ்வாறான கடல் வளமானது திட்டமிட்டும் திட்டமிடப்படாமலும் காவுகொள்ளப்படுகின்றன. இதனைப் பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்

தற்போது சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்கள் பலர் தமது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்பரப்பில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக இம்மாவட்டத்தின் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்றொழிலை மாத்திரம் நம்பி தமது வாழ்வாதாரத்தினைக் நகர்த்திச் செல்லும் மீனவர்கள் கடந்த சில தினங்களாக தொழில் வாய்ப்பற்று காணப்படுகின்றனர். காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக இவர்களது தொழில்வாய்ப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.