சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பினால் இரத்ததான நிகழ்வு... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, June 19, 2020

சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பினால் இரத்ததான நிகழ்வு...கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் நிலவும் இரத்தப் பற்றாக் குறையை நிவர்த்திக்கும் முகமாக சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பின் (Helping Hands Welfare Organization) ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(19) கல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள சாய்ந்தமருது கமு / அல் கமரூன் வித்தியாலயத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த கொரோனா அனர்த்தத்தின் பின்னர் இரத்த வங்கிகளில் இரத்த தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இதற்கமைய இவ்விரத்ததான முகாமில் பெண்களும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ததை காண முடிந்ததுடன் அவர்களுக்கு பிரத்தியேக ஏற்பாடுகளை குறித்த அமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம் எனும் தொனிப் பொருளில் குறித்த அமைப்பு வருடா வருடமாக இந்த இரத்ததான முகாமினை நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.அம்பாரை மாவட்டத்தில் இவ்வமைப்பு முன்னெடுத்த குறித்த இரத்த தான முகாமில் அமைப்பின் அங்கத்தவர்கள் உள்ளடங்களாக சுமார் 100க்கும் அதிகமானவர்கள் பங்குபற்றி இரத்ததானம் வழங்கினர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.ரி யாசிர், செயலாளர் கே.எம் சஜாத் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர்.மேலும் இவ்வமைப்பு கொரோனா அனர்த்த காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் காணப்படும் பொது இடங்களை தொற்றுநீக்கும் வேலைத்திட்டங்களை பரவலாக முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.