எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திர தின விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 11ஆம் திகதி சிவன் ராத்திரி விடுமுறையும் 28ஆம் திகதி போயா தின விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி பெரிய வெள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி போயா தின விடுமுறையும் மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தின விடுமுறையும், 14ஆம் திகதி ரமழான் விடுமுறையும், 26 மற்றும் 27ஆம் திகதி வெசாக் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment