கல்முனை உவெஸ்லி கல்லூரி இராணுவ இடைத்தங்கல் முகாமிற்கு மூடுவிழா! தங்கியிருந்த எவருக்கும் கொவிட் – 19 தொற்று இல்லை என்கிறார் பணிப்பாளர் Dr.சுகுணன். - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Monday, June 15, 2020

கல்முனை உவெஸ்லி கல்லூரி இராணுவ இடைத்தங்கல் முகாமிற்கு மூடுவிழா! தங்கியிருந்த எவருக்கும் கொவிட் – 19 தொற்று இல்லை என்கிறார் பணிப்பாளர் Dr.சுகுணன்.கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரியில் கடந்த இரண்டு மாதகாலமாக நிலைகொண்டிருந்த இராணுவ இடைத்தங்கல் முகாம் நேற்று மூடப்பட்டு அதிபர் த.கலையரசனிடம் கையளிக்கப்பட்டது.


அதனையடுத்து சுகாதார பிரிவினர் இன்று(15)திங்கட்கிழமை அங்கு விஜயம்செய்து பாடசாலையை தொற்றுநீக்கம் செய்தனர்.


விடுமுறையில் சென்றிருந்த இராணுவத்தினர் கொவிட் – 19 அசாதாரண சூழ்நிலைமை காரணமாக ஒரே நேரத்தில் விடுமுறை ரத்து செய்யப்பட்டு முகாம்களுக்கு திருப்பியதால் ஏற்பட்ட இடப் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் தங்கியிருந்த இராணுவத்தினர் முழுமையாக முகாம்களுக்கு திரும்பியுள்ளனர்.
பாடசாலைகள் தொடங்குவதற்கு வசதியாக இம்முகாம் மூடல் இடம்பெற்றுள்ளது.


உவெஸ்லி அதிபர் த.கலையரசன் தெரிவிக்கையில்:
எமது பாடசாலை ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி இராணுவத்தினர் இடைத்தங்கல் முகாமாக பாரமெடுத்தனர். ஆரம்பத்தில் சுமார் 77இராணுவத்தினர் எமது பாடசாலiயில் நிலைகொண்டிருந்தனர். குறிப்பாக எமது பிரதான நல்லதம்பி மண்டபத்தில் மாத்திரமே கட்டில்கள் போடப்பட்டு பயனபடுத்தினர். 


இராணுவத்தினர் தங்கியிருந்த காலத்தில் பாடசாலையில் தொடர்ச்சியாக தொற்றுநீக்கம் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையால் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது முழுமையாக இராணுவத்தினர் பாடசாலையில் இருந்து சென்றபின்னர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குண.சுகுணனின் வழிநடத்தலில் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணினையால் பாடசாலையின் கட்டிடங்கள் தளபாடங்கள் உற்புறச் சூழல் திங்கட்கிழமை முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது. என்றார்.


இன்று கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் கல்முனை வடக்குப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டர்க்டர் ஆர். கணேஸ்வரன் பொதுச்சுகாதார பரிசோதகர் சாமித்தம்பி வேல்முருகு மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.


பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர். சுகுணன் கருத்து தெரிவிக்கையில் :


பாடசாலைகள் ஆரம்பமாகும்போது மாணவர்களுக்கு பாதுகாப்பாக டெங்கு மற்றும் கொரணா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் பாடசாலைகள் தொற்றுநீக்கம் செய்யப்பட்டும் நுளம்பு பெருக்கத்தை தடுக்கும் வகையில் தெளிகருவிகள் மூலம் திரவங்கள் விசிறப்படுகின்றது.


கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் இராணுவத்தினர் தங்கியிருந்தமை முகாம்களில் காணப்பட்ட இட நெரிசல் காரணமாகவே. விடுமறையில் திரும்பியவர்கள் கட்டம் கட்டமாக தங்கியிருந்தனர். இவர்கள் யாருக்கும் கொரனா தொற்று இல்லை. மக்கள் இந்த விடயத்தில் வதந்திகளை கருத்தில் எடுக்க வேண்டாம்.


அனைவரும் பாடசாலைக்கு வருவதற்கு முன்பும் சென்ற பின்பும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் இங்கு தற்காலிமாகவே தங்கியிருந்தனர் எவருக்கும் கொரனா தொடர்பான தாக்கம் இல்லை. பாடசாலை சூழல் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்ட்டு பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது பாடசாலைகள் ஆரம்பமாகும் போது மாணவர்களின் பாதுகாப்பிற்காக டெங்கு மற்றும் கொரனா தொடர்பாக சுகாதார பிரிவால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டுவருகின்றது .என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.