அம்பாறையில் இலஞ்சம் பெற முயன்ற போது கையும் களவுமாக சிக்கிய உயர் அதிகாரிகள் - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Thursday, May 28, 2020

அம்பாறையில் இலஞ்சம் பெற முயன்ற போது கையும் களவுமாக சிக்கிய உயர் அதிகாரிகள்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆணையிட்டுள்ளார்

சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார் 3 இலட்சம் லஞ்சமாகப் பெறப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பிரிவினரே இவர்களை கைது செய்துள்ளனர்.

நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இக்கைது இடம்பெற்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று மாலை நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த போதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.


இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரிப்பதற்குரிய ஒப்புதல் அடிப்படையில் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.