திடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

வெள்ளி, 22 மே, 2020

திடீரென மனுத்தாக்கல் செய்தது ஐ.தே.க


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு வலியுறுத்தி ஐ.தே.க செய்துள்ளது.

இந்த மனு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்தால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதியாக, ஜனாதிபதி சார்பில், சட்ட மா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணி தினேஷ் பதிரண ஊடாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அரசமைப்பின் பிரகாரம், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பொதுத் தேர்தலை நடத்தி, புதிய பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் தேர்தல் நடத்தப்படாதுள்ள நிலையில், ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு உத்தரவிடுமாறும் கோரியே, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.