சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா..? - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

புதன், 20 மே, 2020

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா..?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் சூ.சேவியர் குலநாயகம், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

 விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாக எம்.ஏ.சுமந்திரன் மீது குற்றம் சுமத்தி பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 விடுதலைப் புலிகள் தொடர்பாக தனிப்பட்ட நிலைப்பாடுகள் யாருக்கும் இருக்க முடியும்.

 ஆனால் இனவிடுதலை சுதந்திரம் போன்றவற்றை இலக்காக கொண்டு செயற்படுகின்ற இலங்கைத் தமிழரசு கட்சியில் இருந்துக் கொண்டு கூட்டுப்பொறுப்பின்  மீது சுமந்திரன் அவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

 2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, இவ்வாறு விடுதலைப் புலி எதிர்ப்பு கருத்தை வெளியிட்டமைக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதைப்போன்று, சுமந்திரனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.