11,600 வருடங்களுக்கு ஒரு முறை சூரிய மண்டலத்தில் நுழையும் அதிசய பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களில் கூட பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரமானது பனி மற்றும் தூசுக்களாலான இந்த வால் நட்சத்திரமானது ஆஸ்திரேலியாவின் தெற்கு திசையில் இருந்து வடக்கு திசை நோக்கி பயணிக்கும் எனவும் இது சூரியனை நோக்கிய வழியில் பயணிக்கும் போது அது சூரிய ஒளியை பிரதிபலிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
இந்த நட்சத்திரம் மே 13 ஆம் பூமிக்கு அருகில் பயணிக்கத் தொடங்கியதாகவும் வருகிற மே 27 ஆம் தேதி சூரியனை நோக்கி செல்லும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சூரிய குடும்பத்தை கடப்பதற்கு முன்பாக இந்த நட்சத்திரம் சூரிய ஒளியில் பிரதிபலிக்கும் எனவும் கூறப்படுகிறது. மே மாத இறுதியில் இந்த நட்சத்திரத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது பூமியில் இருந்து சுமார் 5.3 கோடி மைல்கள் தூரம் இருக்கும் எனவும் இந்த நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். அதோடு 5 முதல் 6 நாட்கள் வரை கண்ணாடி ஏதுமின்றி வெறும் கண்களாலேயே இந்த நட்சத்திரத்தை கண்டு மகிழலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கருந்துளையைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய கருந்துளை கிட்டத்தட்டப் பூமிக்கு அடுத்த பக்கத்தில்தான் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கருந்துளை பூமியிலிருந்து சுமார் 1000 ஒளி ஆண்டுகள் தொலைவில் தான் அமைந்துள்ளது. விண்வெளி கணக்கின்படி 1000 ஒளி ஆண்டுகள் என்பது மிகவும் அருகாமையில் தான் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பூமிக்கு மிக அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கருந்துளை, இந்த கருந்துளை தான் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment