உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, August 14, 2020

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 6 வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் பிரிவில்  மூன்றாம் கட்டமாக 2 கிராம சேவகர் பிரிவுகளான  சாளம்பைக்கேணி -1,2,  சொறிக்கல்முனை1,2 ,மத்திய முகாம் -2,4  உள்ள பயனாளிகளுக்கு   தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார 

சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  நேற்றும் இன்றும்(13)  இடம்பெற்றது.

இவ் புதிய வீடுகளுக்கான   நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் தலைமையில்  இடம்பெற்றது.

இப்புதிய வீட்டு நிர்மாணம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மானிய நிதியுதவியின் கீழ்  ஆறு இலட்சம் ரூபா செலவில் பூர்த்திசெய்யப்படவுள்ளது.நிரந்தர வீடில்லாத வறுமைக் கோட்டின் கீழ் உள்ளஇ சமூர்த்தி பெறும் ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களின் சொந்த இடங்களில் வீடமைத்து கொடுக்கும் அரசின் இவ் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வீடமைப்பு நிர்மாணத்திற்கான குறித்த பயனாளியின் சொந்த இடத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில்   நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஆர்.லதாகரன்   தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர் மோ.ஜயபோசன், அந்த அந்த பிரிவு கிராம சேவையாளர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  உட்பட பயனாளி குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.