போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை;; - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Friday, July 10, 2020

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை;;

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர் மீதான விசாரணைகளை துரிதகதியில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

விசாரணைகளை நிறைவு செய்வதனூடாக சட்ட மா அதிபரூடாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை மீள அமுல்படுத்துமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரிக்கும் இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவில் இடமில்லை எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.