விண்டோஸ் 10 தளத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ ஆப் வெளியீடு.... - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, July 1, 2020

விண்டோஸ் 10 தளத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ ஆப் வெளியீடு....

நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்களுக்கு யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்பார்ம் என்ற UWP விண்டோஸ் 10 செயலியை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தரவுகளை டவுன்லோட் செய்வது மற்றும் ஆஃப்லைனில் வீடியோக்களை பார்த்து வந்தனர். 

இந்நிலையில் அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவைக்கான UWP விண்டோஸ் 10 செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. தரவுகளை பிரவுசர்களில் பார்க்க விரும்பாதவர்கள் இந்த செயலியில் பார்த்து ரசிக்கலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் உள்ளதை போன்றே இயங்குகிறது.

செயலியின் பக்கவாட்டில் பல்வேறு தரவுகள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. கீழ்புறத்தில் உள்ள பட்டனை க்ளிக் செய்து அக்கவுண்ட்களை ஸ்விட்ச் செய்து கொள்ளலாம். இத்துடன் இதே பகுதியில் செட்டிங் ஆப்ஷனும் இடம்பெற்று இருக்கிறது.

செட்டிங்ஸ் ஆப்ஷனில் வீடியோக்களின் டவுன்லோட் குவாலிட்டி, டவுன்லோட் மொபைல் டேட்டா மூலம் மேற்கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்கள் இடம்பெற்று இருக்கிறது. தற்சமயம் இந்த செயலி 1080பிக்சல் தரத்தில் மட்டுமே இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.

இந்த செயலியின் முக்கிய அம்சமாக ஆஃப்லைன் வியூவிங் அம்சம் இருக்கிறது. முன்னதாக விண்டோஸ் பயனர்கள் பிரவுசர் சென்றே பிரைம் வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் வீடியோக்களை சேவ் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. தற்சமயம் இந்த செயலியை கொண்டு ஆஃப்லைன் அம்சத்தை பயன்படுத்த முடியும்.
அமேசான் பிரைம் வீடியோ UWP விண்டோஸ் 10 செயலியினை பயனர்கள் மைக்ரோசாப்ட் ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.