• மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை

  மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை

 • அம்பாறையில் 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

  அம்பாறையில் 48 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை

 • கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பம்

  கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பம்

 • மட்டக்களப்பு மாநகர முதல்வரின் நகரத்தை ஒளி மயமாக்கல் திட்டம்

  மட்டக்களப்பு மாநகர முதல்வரின் நகரத்தை ஒளி மயமாக்கல் திட்டம்

 • மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம்

  மழையுடன் கூடிய காலநிலை குறைவடையலாம்

 • வவுணதீவில் பெண்ணொருவரிடம் இலஞ்சம் வாங்கிய கிராம சேவையாளர் கைது

  வவுணதீவில் பெண்ணொருவரிடம் இலஞ்சம் வாங்கிய கிராம சேவையாளர் கைது

 • மட்டக்களப்பில் முச்சக்கரவண்டியில் கடத்திய பெருமளவான மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

  மட்டக்களப்பில் முச்சக்கரவண்டியில் கடத்திய பெருமளவான மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7

கிழக்குச் செய்திகள்

 • Apr 19 , 2018

  கொக்கட்டிச்சோலை காவல் பிரிவிற்குட்பட்ட, கொக்கட்டிச்சோலை கிராமத்தினை வசிப்பிடமாக கொண்ட இளந்தாயொருவர் தீப்பற்றி எரிந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று(19) இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை கிராமத்தில் வசித்துக்கொண்டிருந்த 21வயதினை உடைய துரையப்பா பிறேதா என்ற இளந்தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளந்தாய்க்கு 8மாதமுடைய ஆண் பிள்ளையொருவரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 • Apr 19 , 2018

  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்பட்டது. உயிர்நீர்த்த அன்னை பூபதியின் நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளீர் அணியின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு பிள்ளைகளின் நிலையைக் கருத்திற்கொண்டு ஆனந்த சுதாகரனின் விடுதலையை துரிதப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியே உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தாக, மகளீர் அணியின் தலைவியும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான மனோகர் தெரிவித்தார்.

 • Apr 19 , 2018

  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ். யோகராசா 33 வருட கல்விச் சேவையில் இருந்து 19.04.2018 வியாழக்கிழமை ஓய்வு பெறுகின்றார். கல்வி அமைச்சின் இடமாற்றத்திற்கு அமைய 2010 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் சுமார் 8 வருடமாக முதல்வராக கடமையாற்றிய நிலையில் ஓய்வு பெறுகின்றார். இவர் ஜோசப் அன்ரனி சின்னராசா அருள்மேரி அன்ரனி ஆகியோருக்குப் பெரியகல்லாற்றில் பிறந்த இவர் மட்டக்களப்பில் வசித்து வருகின்றார். 

 • Apr 19 , 2018

  மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, நகர சபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் தெரிவித்துள்ளார். கட்டாக்காலி கால்நடைகள் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாளை முதல் காத்தான்குடி நகர சபைப் பிரிவின் எந்தவொரு இடத்திலும் உரிமையாளரின் அல்லது வளர்ப்பாளரின் பராமரிப்பின்றி அலைந்து திரியும் ஆடுகள், மாடுகள் அனைத்தையும் நகர சபை ஊழியர்கள் கைப்பற்றுவார்கள். 

 • Apr 19 , 2018

  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக முன்னெடுத்த பணிப் பகிஷ்கரிப்பினால் பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு, கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தன.

 • Apr 19 , 2018

  தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவுதினம், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவு தூபிக்கு அருகே குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. அன்னை பூபதியின் பிள்ளைகளின் ஏற்பாட்டில் இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், அன்னை பூபதியின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா, அன்னையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றினார்.

 • Apr 19 , 2018

  கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது பிரதேச தோணாவை அண்மித்த பிரதேசங்களில் முறையாக கழிவுகள் அகற்றப்படாமையின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் எம்.வை.எம். ஜௌபர் எடுத்துக்கொண்ட முயச்சியின் பயனாக மிகுந்த அசுத்த நிலையில் இருந்த குறித்த பிரதேசம் 2018-04-18 ஆம் திகதி மாநகரசபையின் உறுப்பினர் ஜௌபரின் நேரடிக் கண்காணிப்பில் மாநகரசபையால் சுத்தம் செய்யப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த மாநகரசபை உறுப்பினர் ஜௌபர்,

இலங்கை செய்திகள்

 • Apr 18 , 2018

  அட்சய திருதியை தினமான இன்று புதன்கிழமை (18) யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டினர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

 • Apr 18 , 2018

  உலகில் பாரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya என்ற விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது. மலேசியா கோலாலம்பூரிலிருந்து வந்துள்ள இந்த விமானத்தில் 27 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

 • Apr 18 , 2018

  நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென், மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 • Apr 17 , 2018

  உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தை மே 01ம் திகதி தொடக்கம் அமுலுக்கு கொண்டு வர அரசு தீர்மானித்துள்ளதாக அரச தரப்புதகவல்கள் தெரிவிக்கின்றன.

 • Apr 17 , 2018

  கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக்க கொள்ளப்படவுள்ளனர். நேர்முகப் பரீட்சைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர் என்று ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

நினைவலைகள்

வாழ்த்துக்கள்

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 13 , 2018

  மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  இன்றும் நாளையும் மதுபான விற்பனைகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் வகையில் இந்த மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

 • Apr 05 , 2018

  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான ககாலப்பகுதியினுள் விண்ணப்பித்த 31.12.2016 வரை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 2598 பட்டதாரிகள் இந் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

 • Feb 25 , 2018

  சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை (TEA) பட்டறையொன்று அமெரிக்காவிலுள்ள பல்கலைக்ககழகமொன்றில் நடைபெற்று வருகின்றது. உலகெங்கிலுமிருந்து நாடுகளைச் சேர்ந்த 21 ஆங்கில ஆசிரியர்கள் இச்சர்வதேச ஆறு வாரகால பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டுள்ளனர். இப்பட்டறை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மார்ச் 12ஆம் திகதிவரை நடைபெறுகிறது.

 • Apr 05 , 2018

  வவுணதீவில் பெண்ணொருவரிடமிருந்து 5,000 ரூபாயை இலஞ்சமாக வாங்கிய கிராமசேவகரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.  வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் காணி பாத்திரம் தொடர்பில் மேற்படி கிராம அதிகாரியிடம் கோரியபோது, அவர் அப்பெண்ணிடம் 10 ,000 ரூபாயை இலஞ்சமாகக் தருமாறு கூறியுள்ளார். அப்பெண், 5000 பணத்தை வழங்க முற்பட்டப்போதே கிராம அதிகாரிகயை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.