தமிழ் இலக்கியத்திற்கு பெருமைசேர்த்தவர் முகில்வண்ணன். நூல்வெளியீட்டுநிகழ்வில் பிரதேசசெயலாளர் அதிசயராஜ்.. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

தமிழ் இலக்கியத்திற்கு பெருமைசேர்த்தவர் முகில்வண்ணன். நூல்வெளியீட்டுநிகழ்வில் பிரதேசசெயலாளர் அதிசயராஜ்..

 

நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் வித்தகர் முகில்வண்ணன் தன்னுடைய எழுத்தால் தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவர். இவ்வாறு 'முகில்வண்ணன் - நினைவுநூல்' வெளியீட்டுநிகழ்வில் பிரதானஉரையாற்றிய கல்முனை வடக்கு பிரதேசசெயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார். கல்முனைநெற் ஊடகவலையமைப்பினர் ஏற்பாடு செய்த அமரர் முகில்வண்ணனின் நினைவேந்தல் நிகழ்வும் 'முகில்வண்ணன் நினைவுநூல்' வெளியீட்டுநிகழ்வும் பாண்டிருப்பு.1சி பல்தேவைக்;கட்டடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

முன்னதாக அவரது உருவப்படத்திற்கு அவரது சகோதரி திருமதி பூமணிவேதாரணியம் மலர்மாலை அஞ்சலிசெலுத்தி சுடரேற்றினார். தொடர்ந்து உறவினர்களும் முக்கியபிரமுகர்களும் சுடரேற்றி அகவணக்கம் இடம்பெற்றது.

ஊடகசெயற்குழு உறுப்பினரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை முன்னாள் அதிபர் கே.சந்திரலிங்கம் நிகழ்த்த ஆசியுரைகளை சிவஸ்ரீ க.ஜ.யோகராசாக் குருக்கள் மற்றும் பிரம்மகுமாரி மாருதி ஆகியோர் வழங்கினர்.

முகில்வண்ணன் நினைவுமலர் வெளியீட்டுரையை கல்முனைநெற் இணையத்தள ஸ்தாபகர் புவிநேசராசா கேதீஸ்  நிகழ்த்த  அதிதிகள் முதல் சகலருக்கும் நூல் வெளியிட்டு வழங்கிவைக்கப்பட்டது.

பிரதேசசெயலாளர் அதிசயராஜ் மேலும் உரையாற்றுகையில்:

பாண்டிருப்பின் அருச்சுனர் பரம்பரையைச்சேர்;ந்த மூத்த இலக்கியவாதியான முகில்வண்ணன் ஒரு பல்பரிமாண ஆளுமைபொருந்திய மும்மொழிப்புலமைவாய்ந்த ஓர் இலக்கியவாதி. 1956இல் கல்முனைபற்றிமா கல்லூரி வெளியிட்ட ஆம்பல் என்ற பத்திரிகையில் இவரது இலக்கியப்பிரவேசம் இடம்பெற்றிருந்தது. 

கடந்த 60வருடகாலமாக கதை கவிதை சிறுகதை நாவல் சிறுவர் இலக்கியம் கட்டுரை என பலகோணங்களில் 40நூல்களை வெளியிட்டுள்ளார். 2018இல் எமது பிரதேச கலாசாரபேரவையின்உபதலைவராகவிருந்து சேவையாற்றினார். கிழக்கில் இவர்போன்று 40நூல்களை வெளியிட்டு சகலதுறைகளிலும்தடம்பதித்துச் சாதனைபடைத்தவர் எவருமில்லை எனலாம்.என்றார். 

மேலும் இலக்கியவாதிகளான டாக்டர் புஸ்பலதா லோகநாதன்(மலரா) கவிஞர் சபா.சபேசன் எழுத்தாளர் ஆத்மராஜா றூத் சந்திரிகா ஆகியோரும் நினைவுரைகளை நிகழ்த்தினர். ஊடகக்குழுமத்தின் உறுப்பினர் பால்வாவா பாசம்புவி புவிராஜா நன்றியுரையை நிகழ்த்தினார்.

கிழக்கின் மூத்தபடைப்பாளியான வித்தகர் முகில்வண்ணன் தனது 78வது வயதில் கடந்த செப்.17 ஆம் திகதி பாண்டிருப்பில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.