புகைப்படக்கலை; Nova 7i இன் Quad கமெராக்கள்,. - கிழக்குநியூஸ்.கொம்

உடனடிச் செய்திகள்

Home Top Ad


உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.


 

Post Top Ad

Wednesday, June 3, 2020

புகைப்படக்கலை; Nova 7i இன் Quad கமெராக்கள்,.



Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய Nova 7i மத்தியதர ஸ்மார்ட்போனானது திடமான தோற்றத்தில் முதற்தர அம்சங்களைக் கொண்டது. Nova 7i, நம்பமுடியாத விலையில் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளமையால், இலங்கை நுகர்வோர் மத்தியில் உடனடியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் எண்ணற்ற கவர்ச்சியான அம்சங்களில் ஒன்றான quad AI கமெரா அமைப்பே, இதனை மொபைல் புகைப்படவியலில் ஒரு வலுநிலையமாக்கியுள்ளது.


இவ் உலகம் அழகால் நிரம்பியுள்ளதுடன், அதன் சிறந்த தருணங்களை படம்பிடிக்க விரும்புவோர் தற்போது Huawei நிறுவனத்தின் நவீன மத்தியதர புத்தாக்கமான Nova 7i இன் ஆடம்பரத்தைப் பெறுகின்றனர். இந்த quad AI கமெரா அமைப்பானது சதுரவடிவான மாதிரியில் காணப்படுவதுடன், இவ் அமைப்பின் கீழ் LED flash காணப்படுகின்றது. இது PDAF மற்றும் autofocus உடன் கூடிய 48MP முதன்மைக் கமெராவையும், அதனுடன் 8MP ultra-wide angle இரண்டாம் கமெரா, 2MP macro கமெரா மற்றும் ஆழமான விளைவைக் கொண்டுவரும் depth சென்சருடன் கூடிய மேலுமொரு 2MP கமெராவை உள்ளடக்கியுள்ளது. முதன்மை கமெராவால் பிடிக்கப்படும் படங்கள் குறைந்த வெளிச்ச நிலைகளில் கூட பிரகாசமானவையாகும். 8MP ultra-wide கமெரா மலைப்பூட்டும் விவரங்களுடன் கூடிய படங்களை எடுக்க உதவுகிறது.





இதன் திரையின் இடது பக்க மூலையில் ஒரு சிறிய துளையாக (Punch hole) உள்ளடக்கப்பட்டுள்ள முன்பக்க கமெராவானது 16MP என்பதுடன், குறைந்த வெளிச்சத்திலும் பிரம்மிக்க வைக்கும் செல்பிக்களை எடுக்க உகந்ததாகும். இந்த முன் கமெரா இயற்கை அழகு மற்றும் தனிப்பட்ட பண்புகளை வெளிப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

கிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.