தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் " அமாவாசையில் ஒளி மழை எனும் தொனிப்பொருளில் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டெழும் எமது தேசத்தின் இளைஞர்களுக்கும் , பொது மக்களுக்கும் மற்றும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம் .அஸீம் தலைமையில் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் சனிக்கிழமை (20) இரவு இடம்பெற்றது .
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய இளைஞர் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டி.எம்.சிசிர குமார அவர்களும் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவி பணிப்பாளர் டப்ளியு.ஏ.ஜி.எஸ் . தமயந்தி , மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி , பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகாளான ஸமிஹுல் இலாஹி , பைசால் அமீன் மற்றும் இளைஞர் பாரளுமன்ற உறுப்பினர்காளான ஏ.எல்.எம்.அஸ்கி , எஸ்.எம் .ரிஹான் உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment