கிழக்குச் சூரியன் அடைபட்டது சிறையில்..
அன்று உன்னை கைதட்டி
களமாட செய்தவர்கள்....
இன்று உன்னை கை கட்டி
சிறைவாசம் தந்தனர்.....
உன் அரசியல் சாணக்கியம் கண்டு மிரண்டு ..
வெளியில் இருந்தால்
தோல்வி என்று எண்ணி
உன்னை உள்ளே வைத்து பூட்டி
ஆர்ப்பரிக்கின்றனர்...
விடியலுக்காக காத்திருக்கும் மக்கள்
கிழியும்....
கயவர்களின் முகத்திரை
ஆவணித் திங்கள் ஐந்தாம் நாள்
அன்று விடியும்
கிழக்கு தமிழர்களின் வாழ்வு
வெற்றி நாயகனே வென்று வா வெளியே
காத்திருப்போம்
உனக்காகவும் உன் பணிக்காகவும்.....
(ஈகொ)
No comments:
Post a Comment