முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் அதியுச்ச பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறினர்

முல்லைத்தீவு - நாயாறு இறங்குதுறை பகுதியில் தங்கியிருந்த தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் இன்று மாலை அதியுச்ச பொலிஸ் பாதுகாப்புடன் நாயாறு பகுதியிலிருந்து வெளியேறி சென்றுள்ளார்கள்.

நாயாறு இறங்குதுறையில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 8 வாடிகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் கடந்த 13ம் திகதி திட்டமிட்டு தீக்கிரையாக்கப்பட்டது. இதயைடுத்து தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கேட்டு வந்த நிலையில் இன்று மாலை 3.30 மணியளவில் நூற்றுக்கணக்கான பொலிஸ் பாதுகாப்புடன் கையெடுத்து கும்பிட்டு நன்றியும், மன்னிப்பும் கோரிய சிங்கள மீனவர்கள் நாயாற்றிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்தில் நின்றிருந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 13ம் திகதி தமிழ் மக்களுக்கு சொந்தமான வாடிகள் அநியாயமாக தீக்கிரையாக்கப்பட்டு இன்று அந்த மக்கள் தொழிலுக்கும் செல்ல முடியாமல் கையறு நிலையில் நிற்கிறார்கள்.

இந்நிலையில் மக்களும் அதனுடன் இணைந்து பல்வேறு தரப்புக்கள் ஊடாகவும் நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். அந்த கோரிக்கை நாயாற்றிலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும், கொழுத்தப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். இது நிறைவேற்றப்படும்வரை பட்டினிசாவை எதிர்கொண்டாலும் பரவாயில்லை. எமது மீனவர்கள் தொழிலுக்கு செல்லமாட்டார்கள் என்பதே அந்த கோரிக்கையாகும்.

இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு மக்கள் என்னை அழைத்தார்கள் அதிகளவான பொலிஸார் வந்து நிற்பதாக. அதனையடுத்து நான் நாயாறு பகுதிக்கு சென்றபோது அங்கே தென்னிலங்கை மீனவர்கள் தங்களுடைய பொருட்களை

வானங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பல நூற்றுக்கணக்கான பொலிஸாருடைய பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை யார் எடுத்திருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

காரணம் மிக மோசமான போரை சந்தித்த மக்கள் மீள்குடியேற்றத்தின்போது எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமலேயே வந்தார்கள். அந்த மக்களுடைய பொருளாதாரத்தை அல்லது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில்

திட்டமிட்டு தென்னிலங்கை மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வரவழைக்கப்பட்டார்கள். அதற்கு மேலாக சட்டவிரோத தொழில்கள் அத்தனையையும் செய்வதற்கு அவர்களுக்கு பூரணமான அனுமதி கொடுக்கப்பட்டது.

இதனால் போருக்கு பின்னரான காலத்தில் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம். அந்தவகையில் எவருடைய தலையீடும் இல்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் எமது மீனவர்கள் தங்கள் சுய பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதற்கதன சந்தர்ப்பமாக தென்னிலங்கை மீனவர்களின் வெளியேற்றம் அமையும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

இதேவேளை, மனித உரிமை ஆணைக் குழுவினரும் குறித்த இடத்துக்கு வந்திருந்தனர்.

இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடந்தால் தம்மிடம் உடனடியாக தெரிவிக்கும்படியும், சமாதானதமாக செயற்படவேண்டும் என்றும் தமிழ் மக்களிடம் வலியுறுத்திக் கூறினர்.

mu 2

mu 2

mu 2

mu 2

mu 2

mu 2

(ஞா.பிரகாஸ்)

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.