இலங்கை கல்வி நிருவாகசேவை தரம்1ற்கு 79பேர் பதவியுயர்வு! 51சிங்களவர் : 20தமிழர்கள் : 08முஸ்லிம்கள்

இலங்கை கல்வி நிருவாக சேவை முதலாம் தரத்திற்கு நாடளாவியரீதியில் 79 கல்வி அதிகாரிகள் முதற்கட்டமாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி நிருவாகசேவையின் இரண்டாந்தர அதிகாரிகளான இவர்கள் நாடாளாவியரீதியில் மாகாண வலய கல்விப்பணிமனைகளில் கடமையாற்றிவந்தனர்.

அரசசேவை ஆணைக்குழுவின் கடிதப்;பிரகாரம் கடந்த 01.01.2013முதல் இவர்களது பதவியுயர்வு அமுலுக்கு வருகின்றது.

பதவியுயர்த்தப்பட்ட 79பேரில் 51சிங்கள 20தமிழ் 08முஸ்லிம் கல்வி அதிகாரிகள் அடங்குகின்றனர்.

பதவியுயர்த்தப்பட்ட 20தமிழ் அதிகாரிகளின் பெயர்வருமாறு:
எஸ்.மனோகரன் என்.விஜேந்திரன் வீ.மயில்வாகனம் கே.சத்தியநாதன்; எம்.உலகேஸ்பரம் என்.தெய்வேந்திரராஜா எம்.இராதாகிருஸ்ணன் வை.ரவீந்திரன் எஸ்.புஸ்பலிங்கம் எஸ்.சுந்தரசிவம் எஸ்.நந்தகுமார் ஏ.ஸ்ரீஸ்காந்தராஜா கே.வரதராஜமூர்த்தி; ஏ.இளங்கோ ரிஜே.குயின்ரஸ் திருமதி எல்.எம்.வினிற்றன் திருமதி எஸ்.எஸ்.செபஸ்ரியான் திருமதி பி.கணேசலிங்கம் ஏ.நளினி திருமதி பி.இராமநாதன்

பதவியுயர்த்தப்பட்ட 08முஸ்லிம் அதிகாரிகளின் பெயர்வருமாறு:

எம்.எஸ்.அப்துல் ஜலீல் எம்.எம்.சியான் எம்.ஜ.எ.முத்தலிப் எ.எல்.எம்.காசிம் பி.எம்.நசீர் எம்.ஜ.சேகுஅலி திருமதி எம்.எம்.மன்சூர் திருமதி எம்.ரி.எஸ்.பாஸியா.

பதவியுயர்வு பெற்றவர்களில் 11பேர் ஓய்வுபெற்றவர்களாவர். அறுவர் இவ்வாண்டுக்குள் ஓய்வுபெறவிருப்பவர்களாவர்.
இவர்கள் அனைவரும் 4.1.1999இல் இ.க.நி.சேவை தரம் 3இல் நியமனம் பெற்று பத்து வருடங்களின் பின்னர் 4.1.2009 இல் இ.க.நி.சேவை தரம் 2இல் நியமனம் பெற்றவர்களாவர்.

இது முதற்கட்டமாக வழங்கப்படுகின்ற பதவியுயர்வாகும். தேவையான தகைமையைப்பூர்த்திசெய்தபிற்பாடு இன்னும் சிலருக்கு பின்னர் வழங்கப்படவிருக்கின்றதாகத் தெரியவருகின்றது.

(காரைதீவு நிருபர் சகா)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.