அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் குழறுபடி?: யாழ் பட்டியலில் பௌத்த பிக்குவிற்கு நியமனம்

யாழ் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் பெரும் குழறுபடி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த நியமன விவகாரத்தில், யாழ் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் பெரும் குழறுபடி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீண்டகாலமாக இழுபறியில் உள்ள இந்த நியமன விவகாரத்தில், அரசியல் தலையீடுகள் புகுந்து விளையாடுகின்றன என்ற சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமான சம்பவங்கள் நேற்று நடைபெற்றன. அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பட்டியல் நேற்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகி, சிறிது நேரத்திலேயே அது அகற்றப்பட்டு விட்டது.

அந்த பட்டியலில் மாத்தறை- 193, களுத்துறை- 281, ஹம்பாந்தோட்டை- 130, கேகாலை- 163, யாழ்ப்பாணம் 334, மட்டக்களப்பு- 380, கொழும்பு- 171, இரத்தினபுரி- 236, மொனராகலை- 68, மாத்தளை- 79, கம்பஹா- 331, கண்டி- 224, காலி- 237, வவுனியா- 80, குருணாகல- 311, நுவரெலியா- 52, பதுளை- 139, அனுராதபுரம்- 107, புத்தளம்- 77, திருகோணமலை- 64, கிளிநொச்சி- 71, முல்லைத்தீவு- 73, மன்னார்- 126, அம்பாறை- 101, பொலனறுவை- 23 பேர் நியமனம் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதில் பல குழறுபடிகள் இருப்பதாக பல தரப்பிலிருந்தும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இலங்கை பல்கலைகழக பட்டதாரிகளிற்கே அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படுமென அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்தபோதும், வெளிவாரி பட்டதாரிகள் கணிசமான உள்ளீர்க்கப்பட்டிருந்தார்கள்.

வடக்கு, கிழக்கு நியமனங்களில் வேலைவாய்ப்பு பொதுகொள்கையொன்றை அரசாங்கம் கடைப்பிடிக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படும் விதமாக, பல்கலைகழகத்திலிருந்து நீண்டகாலத்தின் முன் வெளியேறியவர்களை விட, அண்மையில் வெளியேறியவர்கள் அதிகளவில் இணைக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே அரச சேவையில் இருக்கும் சிலரும் இந்த பட்டியலில் இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை பகுதி நியமனங்களில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தராக யாழில் இருந்த பௌத்த பிக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நியமன பட்டியலில் 331வது பெயராக, யாழ் ஆரியகுளத்தில் அமைந்துள்ள நாகவிகாரையிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 1990 இல் பிறந்த இந்த பௌத்த பிக்குவிற்கு அரச நியமனம் யாழ்ப்பாண பட்டியலில் வழங்கப்படுகின்ற போதும், அவரை விட அதிக வயதுள்ள பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் வழங்கப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம், முற்றிலும் அரசியல் நியமனமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

(பா.சிகான்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.