யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக நேற்று (25) மாலை மீட்கப்பட்டுள்ளார்.

சுழிபுரம் பாண்டாவெட்டை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் றெஜினா (வயது -6) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டதுடன் சடலம் காணப்பட்ட இடத்துக்கு வந்த யாழ்ப்பாணம் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தடயப் பொருள்களை மீட்டனர்.

மேலும் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றிக்குள் உள்ளாடை மாத்திரம் காணப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அச்சிறுமி துன்புறுத்தலின் பின் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டே கிணற்றில் போடப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் கழுத்தானது நெரிக்கப்பட்ட நிலையிலும் நெற்றி பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும் மாணவியின் தோடும் களவாடப்பட்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் உடற்கூற்று பரிசோதனையின் பின்பே உறுதி செய்ய முடியும் என தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த நான்கு பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற்போன குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் வேலையின் நிமித்தம் {கூலி வேலை} வெளியே சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவ இடத்தில் நேரடி விசாரணைகள் மேற்கொண்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா சிறுமியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை 7 ஆண்டுகளுக்கு முன்னர் அதே இடத்தைச் சேர்ந்த 8 வயது மாணவியும் இவ்வாறு கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இம்மாணவி குறித்து பாடசாலை ஆசிரியர் கருத்து பாடசாலை அதிபர்

எப்போதும் துடிப்புடன் பறந்து திரிந்த இந்த அழகிய சிட்டு குருவியின் ஆயுள் முடிக்கப்பட்டது.எமது பாடசாலையில் சடலமாக மிட்கப்பட்ட இந்நாளில் தான் காலை இச்சிறுமி பாடசாலையில் நற்சிந்தனை சொன்னாள்.

துடிப்பானவள். நல்லா படிப்பாள். எப்போதும் இவள் சுத்தமான ஆடை அணிந்து வருவாள். அனைத்து ஆசிரியர்களுக்கும் இவளில் ஒரு கண் இருந்தது. இப்படிச் சொல்லிக் கலங்குகிறார் இவளது வகுப்பாசிரியை சம்பவத்தைக் கேள்விப்பட்டு இடிந்துபோனார்.

இவளை நல்லவளாக உருவாக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர் 10 கிலோமீற்றர் தூரத்தில் - சங்கானையில் உள்ள பட்டர்பிளை முன்பள்ளியில் சேர்த்தனர். அங்கும் இவள் சுட்டித்தனம்..இவளது எதிர்காலம் சிறப்பானதாக மாறும் என தாங்கள் நம்பியிருந்தனர் என இவளைக் கற்பித்த ரியூசன் ஆசிரியைகள் கூறுகின்றனர்.வீட்டில் இவள் கடைக்குட்டி.பெற்றோர் எத்தகைய அன்பு பாசம் வைத்திருந்தனர் என்பதை அவர்கள் படுகின்ற வேதனை.. அவர்களின் கதறல் வெளிக்காட்டுகின்றது.

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

jaf 2

(பாறுக் ஷிஹான்)

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.