யாழ் இந்து சாரணர்களால் கொண்டாடப்பட்ட சூழல் தினம்

உலக சுற்றுச் சூழல் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவினரால் உலக சூழல் தினம் கல்லூரியில் ஒழுங்கமைக்கப்பட்டது.

 

இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பிளாஸ்ரிக் மாசை இல்லாது ஒழிப்போம் மீளப் பயன்படுத்த முடியாதென்றால் அதனை முற்றாக நிராகரிப்போம்" தெரிவு செய்யப்பட்டது. நிகழ்வுகள் யாவும் இன்று (05/06/2018) காலை 10.00 மணியளவில் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பழைய மாணவனும், யாழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரும் வாழ் நாள் பேராசிரியருமாகிய பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்தார். கல்லூரி அதிபர் திரு சதா. நிமலன், பாடசாலை ஆசிரியர்கள், சாரணர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.

சாரண ஆசிரியர் திரு.க.சுவாமி நாதன் அவர்களால் "சூழலும் சமூகமும்" என்ற கோட்பாட்டிலான உரை நிகழ்த்தப்பட்டது. பிரதம விருந்தினர் அவர்கள் தனது சிறப்புரையில் உலக சுற்றுச் சூழல் தினம் ஆரம்பிக்கப்பட்டமையின் உள்ளார்ந்த சிந்தனைகளையும், அவை அடிப்படையிலான நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களுக்கான புவி வெப்பமடைதல் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது.

குறித்த நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் அடையாள பூர்வமாக மரக்கன்றுகள் சாரணர்களுக்கு வழங்கப்பட்டு பாடசாலை வளாகத்தில் நடப்பட்டது. உலக சுற்றுச் சூழல் தினமானது வருடா வருடம் யாழ் இந்துக் கல்லூரி சாரணர்களால் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

ad 2

ad 2

ad 2

ad 2

ad 2

ad 2

ad 2

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.