வேளாண் கருவிகள் வழங்கிவைப்பு

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட வேளாண் கருவிகள் தெரிவு செய்யப்பட்ட இருபத்தொரு பயனாளர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தனது 2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் ரூபாய் மூன்று இலட்சத்து எழுபதாயிரத்தை வேளாண் கருவிகளுக்காக ஒதுக்கியிருந்தார்.

தெரிவு செய்யப்பட்ட இருபத்தொருவர்க்குமான கருவிகள் வழங்கும் நிகழ்வானது இன்று (04) முற்பகல் 10:00 மணியளவில் முல்லைத்தீவு பதில் உதவி விவசாயப் பணிப்பாளர் ந.விசயன் அவர்களது தலைமையில், முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ரவிகரன் அவர்கள்,

எமது மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மிகவும் அதிகம். தேவைகளும் அதிகமாக உள்ளன. இந்நிலையில் முடிந்தளவு உதவிகளைச் செய்யப்பட்டுவருகிறது. தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களாகவுள்ள நீங்கள் இதன் மூலம் பயனடைய வேண்டும். உங்களுடைய வளர்ச்சியின் மூலம்தான் இத்திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

நிகழ்வின் தொடர்ச்சியாக பயனாளர்க்கான கருவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளர்கள் ரவிகரன் அவர்களிடமிருந்து வேளாண் கருவிகளை பெற்றுக்கொண்டனர். இறுதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சிவபாலன் ரஞ்சித் அவர்களுடைய நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

(ஞா.பிரகாஸ்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.