இன்று யாழ் தர்மபுரத்தில் பாதயாத்திரீகர்கள் குழு

வரலாற்றுப் பிரசித்திபெற்ற இலங்கையின் மிக நீண்ட கதிர்காம பாதயாத்திரையாகக் கருதப்படும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரீகர்கள் இன்று(21) திங்கட்கிழமை இரவு தர்மபுரத்தில் தங்குவார்கள்.

கடந்த 17ஆம் திகதி வியாழனன்று யாழ்ப்பாணம் செல்வச்சந்நதி ஆலயத்திலிருந்து பகல்11.15மணியளவில் வேல்சாமி தலைமையிலான குழுவினர் 54நாள் பயணத்தை பூஜை புனஸ்காரங்களுடன் ஆரம்பித்தனர்.

குழுவில் 52பக்தர்கள் அடங்குகின்றனர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தில்வைத்து மேலும் 50பேரளவில் இணையவுள்ளதாக அங்கிருந்து வேல்சாமி தெரிவிக்கின்றார்.

கடந்த4 தினங்களாக புத்தூர் இராமாவில் உசன்பளை கரந்தை ஆகிய கிராமங்களைத்தாண்டி இடையிடையே சிறுமழைக்கு மத்தியில் இயக்கச்சி உமையாள்புரத்தை அடைகின்றோம்.

எம்முடன் லண்டனிலிருந்து இதற்கென வருகைதந்த கே.மணிவாசகர் நீர்கொழும்பைச்சேர்ந்த பெர்ணாண்டோ ஆகியோருடன் 52பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆலயங்களில் சரியைத் தொண்டுகளைச்செய்து பஜனையிலும் ஈடுபட்டுவருகின்றோம்.

vel 1

vel 1

vel 1

vel 1

vel 1

vel 1

(காரைதீவு நிருபர் சகா)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.