அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஐயாயிரம் பேருக்கு பணி

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஐயாயிரம் பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற வரையறுக்கப்பட்ட (Limited) மற்றும் திறந்த (Open) போட்டிப் பரீட்சையின் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்ற பரீட்சார்த்திகள் நேர்முக பரீட்சையின் மூலம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜி.கமகே தெரிவித்தார்.

இதற்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வழங்கப்படவுள்ளதுடன் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டராவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

முகாமைத்துவ சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவோருக்கு மாவட்ட மட்டத்தில் இரண்டு வார பயிற்சி வழங்கப்படும் என்பதுடன் பயிற்சியின் பின்னர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கமகே தெரிவித்தார்.

இதேவேளை இந்த சேவையில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதன் மூலம், கடந்த ஆண்டு ஜனவரி 30ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் முழுமைப்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.