இலங்கை செய்திகள்

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம்

தமிழகம் தூத்துக்குடியில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டிய ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். நகர பேருந்து நிலையம் முன்பாக நடத்தப்பட்டது.

இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்

யாழ்ப்பாணம் - இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா நேற்று (26) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.

சீரற்ற காலநிலையால் 16 பேர் உயிரிழப்பு; 127,913 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 16 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நீர்கொழும்பில் நினைவேந்தல்

“யுத்தத்தின் கொடூரத்தை நினைவு கூருவோம்” என்ற தொனிப்பொருளில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவேந்தலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டமும் நேற்று (23) நீர்கொழும்பு பேருந்த நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மகா வித்தியாலய விளையாட்டரங்கு திறந்துவைப்பு

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் முத்தையா என்ற பெயர் பொறிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு ஒன்று நேற்று (24) காலை பத்து மணியளவில் முன்னைநாள் பாடசாலை முதல்வர் மு.முத்தையா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

கல்வி அமைச்சினால் கர்பிணி ஆசிரியைகளுக்கு சீருடை அறிமுகம்

கர்பிணி ஆசிரியைகளுக்கு இன்று முதல் சீருடை கல்வி அமைச்சினால் அறிமுகம் செய்யபட்டள்ளது. இதுதொடர்பான நிகழ்வு கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது.இதன் போது சீருடை மற்றும் சுற்று நிறுபமும் வெளியிடப்பட்டன.

நீதிபதி இளஞ்செழியனை சந்தித்த யாழ் இராணுவ தளபதி

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை யாழ்ப்பாணம் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி நேற்று (24) நேரில் சந்தித்தார்.

14 மாவட்டங்களில் 8 மரணம், 5885 குடும்பங்களில் 22777 பேர் பாதிப்பு

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக 14 மாவட்டங்களில் 5885 குடும்பங்களைச் சேர்ந்த 22777 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு

உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களின் நலன் கருதி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருக்குறள் தேர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 20.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை நடைபெற்றது.

ஜேர்மன் உதயம் நிறுவனத்தினால் வீட்டுத் தோட்ட நீர் விநியோகங்கள்

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அல்லலுறும் உறவுகளுக்கு உதவிடுவோம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.சுமார் 40அடி உயரமான வழுக்குமரத்தில் தனது கோஸ்ட்டியுடன் ஏறிய சாமித்தம்பி தவராசா(வயது 40) என்பவரே இவ்விதம் பரிதாபகரமாக மல்லாக்க வீழந்தார்.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.