போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்பி ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவோம் - ஜனாதிபதி

போதையற்ற சமூகம் ஒன்றை கட்டியெழுப்பி, அதனூடாக ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். இந்த செயற்றிட்டத்திற்கு அனைவரும் உயர்ந்தபட்ச பங்களிப்பை வழங்குவது அவசியம் என்று குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட உயர் அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற போதையற்ற நாடு என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார ரீதியில் ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலேயே போதைப்பொருள் பாவனை தடுப்பு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த சில வருட காலத்திற்குள் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

போதைப் பொருள் பாவனை தடுப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய, பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை