இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது: தாய்லாந்து நிபுணர்கள் குழு உறுதி

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தாய்லாந்து நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்தின் தொழில்நுட்ப நிபுணர் குழு, நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்ததை அடுத்து இதனை அறிவித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐவரடங்கிய குறித்த குழுவினர் கடந்த 20 ஆம் திகதி முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மவுசாகலை மற்றும் காசல்ரீ நீரேந்து பகுதிகளை அண்மித்த பகுதிகளில் 3 நாட்களாக குறித்த குழுவினர் கள ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை