• மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்த போராட்டமும்

  மாமனிதர் டி.சிவராமின் 13வது ஆண்டு நினைவினை முன்னிட்டு கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்த போராட்டமும்

 • முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதற்கு எதிராக, திருகோணமலை இந்து கல்லூரியில் ஆர்ப்பாட்டம்

  முஸ்லிம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து வருவதற்கு எதிராக, திருகோணமலை இந்து கல்லூரியில் ஆர்ப்பாட்டம்

 • மட்டிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகம்

  மட்டிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகம்

 • கடல் கொந்தளிப்பு ஏற்படும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

  கடல் கொந்தளிப்பு ஏற்படும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

 • க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

  க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

 • அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

  அம்பாறை மாவட்டத்தில் 75 வீதம் நெற்செய்கையில் வீழ்ச்சி; பஞ்சம் ஏற்படலாம் என அச்சம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6

கிழக்குச் செய்திகள்

 • Apr 25 , 2018

  அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், இரவு நேரத்தில் பயணம் செய்வோரின் நலன்கருதி அட்டாளைச்சேனை, பாலமுனை, மீனோடைக்கட்டு, எல்லைப் பிரதேசத்தில் மின்விளக்குகளைப் பொருத்துமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக, பொதுமக்கள் இன்று (25) மகஜர் ஒன்றை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவுக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

 • Apr 25 , 2018

  சாய்ந்தமருது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை கூடம் திறந்து வைக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நிகழ்வு இன்று (25) புதன்கிழமை இடம்பெற்றது. சாய்ந்தமருது வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.எம்.எஸ்.ஜெசீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள் சனூஸ் காரியப்பர், எம்.ஏ.சீ.எம்.அமீன், மஸாயா சமட், நினா இர்சாத், வைத்தியசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளரும், சமுர்த்தி உதவி முகாமையாளருமான றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர்களான ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர் எம்.ஆதம், விவாகப் பதிவாளர் எம்.எம்.உதுமாலெவ்வை, பொருளாளரும்

 • Apr 25 , 2018

  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயகமும் கலாசார திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார சித்திரப் புத்தாண்டு நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் சர்வோதய வளாகத்தில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் யோகராஜா தலைமயில் இடம்பெற்றது. தமிழ் பாரம்பரியத்தின் பழைமையை நினைவு படுத்தும் வகையில் பாரம்பரிய உணவுகள் தயாரிக்கப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டதுடன், கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிறைவேற்று சபையில் நேற்று தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், ரி.பி.இலங்கரட்ன, அலவி மௌலானா போன்ற தொழில் வர்க்கத்திற்காக அளப்பெரும் சேவையாற்றிய தொழிற்சங்கத் தலைவர்களை பாராட்டும் மாநாடொன்று எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

 • Apr 25 , 2018

  குறித்த போராட்டம் மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவில் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் படுகாயமடைந்து நடப்பதற்கு முடியாத நிலையில் உள்ள தனக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி க.கிருபாகரன் என்ற ஆசிரியர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். கல்லடியை சேர்ந்த குறித்த ஆசிரியர், கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயத்தில் பத்து வருடமாக ஆசிரியராக கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நடந்த விபத்தில் 10 மாதங்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்துள்ளார். 

 • Apr 25 , 2018

  சில காலங்களில் மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகரிக்கக் கூடும் நிலைமை இருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். வாகரை பால்ச்சேனை சன்றைஸ் அமைப்பினால் பல்கலைக் கழகம் சென்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார். 

 • Apr 25 , 2018

  திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மனிதநேய செயற்பாடுகளை மிகவும் சிறப்பான முறையில் சமூகத்தில் இன, மத, மொழி பேதங்களை கடந்து மேற்கொண்டு வரும் எகெட் கரித்தாஸ் அமைப்பின் 40 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்வுகள் கடந்த (22) திருகோணமலையில் எகெட் கரித்தாஸ் அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை க.நிதிதாசன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலை இறையிரக்க திருதலத்தில் திருகோணமலை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

இலங்கை செய்திகள்

அறிவித்தல்கள்

நினைவலைகள்

வாழ்த்துக்கள்

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 13 , 2018

  மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் சட்ட விரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை இன்று வெள்ளிக் கிழமை அதிகாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  இன்றும் நாளையும் மதுபான விற்பனைகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் வகையில் இந்த மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

 • Feb 25 , 2018

  சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை (TEA) பட்டறையொன்று அமெரிக்காவிலுள்ள பல்கலைக்ககழகமொன்றில் நடைபெற்று வருகின்றது. உலகெங்கிலுமிருந்து நாடுகளைச் சேர்ந்த 21 ஆங்கில ஆசிரியர்கள் இச்சர்வதேச ஆறு வாரகால பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டுள்ளனர். இப்பட்டறை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மார்ச் 12ஆம் திகதிவரை நடைபெறுகிறது.

 • Apr 05 , 2018

  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 30ஆம் தகதி வரையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் இதற்கான அழைப்புகள் பட்டதாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக கடந்த 06.08.2017 முதல் 08.09.2017 வரையான ககாலப்பகுதியினுள் விண்ணப்பித்த 31.12.2016 வரை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 2598 பட்டதாரிகள் இந் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.