நாவற்குடா சிவன் ஆலய புனருத்தாபன அடிக்கல் நாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு நாவற்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் பரிவார மூர்த்திகள் ஆலயங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களான தி.சரவணபவான், தி.ஸ்ரீஸ்காந்தராசா, து.மதன் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். புதிதாக அமைக்கப்படுகின்ற இவ்வாலயத்தின் புனருத்தாபன பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பரிவார மூர்த்திகளுக்கான ஆலயங்கள், வந்த மண்டபம், நவக்கிரக ஆலயங்கள் போன்றவற்றிற்கான அடிக்கல் இன்றைய தினம் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ko 2

ko 3

ko 4

அதிகம் வாசித்தவை