இலங்கை செய்திகள்

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியீடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படவுள்ளன.  விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்பி ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவோம் - ஜனாதிபதி

போதையற்ற சமூகம் ஒன்றை கட்டியெழுப்பி, அதனூடாக ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். இந்த செயற்றிட்டத்திற்கு அனைவரும் உயர்ந்தபட்ச பங்களிப்பை வழங்குவது அவசியம் என்று குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட உயர் அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற போதையற்ற நாடு என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

சுகாதார ரீதியில் ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலேயே போதைப்பொருள் பாவனை தடுப்பு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த சில வருட காலத்திற்குள் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

போதைப் பொருள் பாவனை தடுப்பு, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய, பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம்

ஒரே பாடசாலைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தரம் 6க்கும் 11க்கும் இடைப்பட்ட வகுப்புக்களில் கற்பித்த ஐயாயிரத்து 473 ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் தேசிய பாடசாலைகளுக்கான இந்த ஆசிரிய இடமாற்றம் அமுல்படுத்தப்பட இருக்கிறது.

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது: தாய்லாந்து நிபுணர்கள் குழு உறுதி

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக தாய்லாந்து நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக, இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்தின் தொழில்நுட்ப நிபுணர் குழு, நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்ததை அடுத்து

சிங்கள மொழியறிவு இல்லாதக் காரணத்தால் பேஸ்புக் சீர்செய்ய காலதாமதம்

பேஸ்புக் நிறுவனத்தில் சிங்கள் மொழி அறிவுடையவர்கள் குறைவாக உள்ளனர். இதனால் இலங்கையில் பேஸ்புக் நிறுவத்தின் முடக்கத்தினை சீரமைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதென பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி இன்று நள்ளிரவு முதல் 29 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரையில் ஒரு ரூபாவாகக் காணப்பட்ட விசேட வர்த்தக வரி இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால நிலையில் மாற்றம் - வளிமண்டளவியல் திணைக்களம்

நாட்டின் வான்பரப்பில் ஏற்பட்டுள்ள அலைபோன்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வளிமண்டளவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

கொரிய மொழி தேர்ச்சி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையும் , மார்ச்மாதம் 1ஆம் 2 ஆம் திகதிகளிலும் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பப்படிவங்களை நாடு முழுவதிலுமுள்ள கீழ்வரும் 18 மத்திய நிலையங்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை பெற்றுக்கொள்ளமுடியும்.

ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு டெப் (TAB) வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்

உயர்தர வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கணினிகளை வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 160,000 மாணவர்களுக்கும், 36,000 ஆசிரியர்களும் டெப் கணினிகளை வழங்கப் போவதாக கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.

கல்முனையில் இந்திய வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம்

இந்தியாவை சேர்ந்த வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம் ஒன்று இந்த மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.