கிழக்குச் செய்திகள்

அம்பாறையில் அடிகாற்று அடைமழை: கூரைகள்சேதம். மீனவர், விவசாயிகள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடிகாற்றுடன்கூடிய அடைமழை பொழிந்து வருகின்றது. குறிப்பாக கரையோரப்பிரதேசமெங்கும் அடிகாற்றினால் தகரக்கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. தொடரும் அடைமழையினால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதுடன மக்களின் இயல்புவாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Read more ...

பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பாடசாலையின் அதிபர் தலைமையில், அண்மையில் இடம்பெற்றது.

Read more ...

காரைதீவில் நட்டநடுநிசியில் பயிர்பச்சைகளை அழித்து யானைகள் துவம்சம்

அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை முடிவுறுந்தறுவாயில் யானைகளின் ஊடுருவல் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்துவருகின்றது. மாலையானால் மக்கள் மத்தியில் மரணபயம் பீடித்துக்கொள்கின்றது. உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு விடிய விடிய தீனா(நெருப்பு) வைத்துக்கொண்டு விழித்திருக்கவேண்டியுள்ளது. 

Read more ...

கோயில் உண்டியலைத் திருடிய இளைஞன் கைது

ஏறாவூர்- கொம்மாதுறைப் பிரதேசத்தில் உள்ள காளி கோயில் உண்டியலைத் திருடிய இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்மாதுறை 10ஆம் கட்டை ரயில் பாதையோடு அமைந்த புதருக்குள் மறைந்திருந்து திருடப்பட்ட உண்டியலை உடைத்து அதனுள் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more ...

கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள சந்திவெளிப் பிரதேசத்தில் இரண்டு கடைகளை உடைத்து பணம், பொருட்கள் திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக 4 சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 11.03.2018 கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

Read more ...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் விஞ்ஞானக் கண்காட்சி

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் விஞ்ஞானப்பாட ஆசிரியர்களினாலும், மாணவர்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்ட "விஞ்ஞானக் கண்காட்சி" கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராசா தலைமையில் இன்று திங்கட்கிழமை (13.3.2018) நடைபெற்றது.

Read more ...

நாவற்குடா சிவன் ஆலய புனருத்தாபன அடிக்கல் நாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு நாவற்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் பரிவார மூர்த்திகள் ஆலயங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

Read more ...

மத்தியமுகாமில் மின்னல்தாக்கி குடும்பஸ்தர் பலி

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் இன்று நண்பகல் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது மின்னல் தாக்குதல் காரணமாக ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Read more ...