எகெட் கரித்தாஸ் மனிதநேய அமைப்பின் 40 வருட நிறைவு நிகழ்வு

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மனிதநேய செயற்பாடுகளை மிகவும் சிறப்பான முறையில் சமூகத்தில் இன, மத, மொழி பேதங்களை கடந்து மேற்கொண்டு வரும் எகெட் கரித்தாஸ் அமைப்பின் 40 ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்வுகள் கடந்த (22) திருகோணமலையில் எகெட் கரித்தாஸ் அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை க.நிதிதாசன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது திருகோணமலை இறையிரக்க திருதலத்தில் திருகோணமலை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் தலைமையில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக திருகோணமலை மறை மாவட்ட முன்னாள் ஆயர் யோசப்கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, எகெட் கரித்தாஸ் தேசிய நிலையத்தின் (கொழும்பு) பணிப்பாளர் அருட்தந்தை மகோந்திர குணதிலக்க, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி, அனுராதபுரம், பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்ட கரித்தாஸ் அமைப்பின் பணிப்பாளர்கள் மற்றும் திருகோணமலை எகெட் கரித்தாஸ் அமைப்பின் அனைத்து பணியாளர்களும் மற்றும் அருட்சகோதரிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இதன்போது, அமைப்பின் சிறந்த சேவைகளை வழங்குவதற்கு வழிகாட்டியாக இருந்தவர்களான திருகோணமலை மறை மாவட்ட முன்னாள் ஆயர் யோசப்கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை மற்றும் தற்போதைய ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆகியோரை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டதுடன் 40 ஆவது ஆண்டு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது.

ehed 2

ehed 2

ehed 2

ehed 2

- (திருமலை நிருபர் க.சூரியா)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.