60 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கல்

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும், தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எம்.ஹமீட், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தியாவட்டவான்; கிராம சேகவர் பிரிவிலுள்ள சிறிய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அமைச்சின் முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் ஓடாவி உபகரணம், மேசன் உபகரணம், இடியப்பம் அவிக்கும் உபகரணம், மண் வெட்டி, எண்ணெய் தெளிக்கும் கருவி, தண்ணீர் பம், மீனவர் பாதுகாப்பு கவசம் உட்பட்ட உபகரணங்கள் 68 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு தேசிய நல்லிணக்க அமைச்சின் முப்பது இலட்சம் நிதி ஒதுக்கீட்டில்; புல் அரைக்கும் இயந்திரம், துவிச்சக்கர வண்டி, சோளம் பொறி இயந்திரம் உட்பட்ட பல்வேறு உபகரணங்கள் 52 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலியின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலகங்கள் தோறும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

01 9 696x464

01 8 2 696x464

 

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.