சோடாவில் மயக்க மருந்தினை கொடுத்து நூதன முறையில் திருட்டு ; தோப்பூரில் சம்பவம்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு உட்பட்ட வீட்டில் இருந்தவர்களிடம் சகஜமாக பேசி அவர்களுக்கு சோடாவில் மயக்க மருந்தினை கொடுத்து தங்க நகைகளை திருடிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் புதன்கிழமை (18-04-2018) ) மாலை இடம் பெற்றுள்ளது. மூன்று இனந் தெரியாத நபர்கள் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் கழுத்திலிருந்த 3 அரை பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்றுள்ளனா்.

இந்த நிலையில் மயக்க மருந்து கலந்த சோடாவினை அருந்திய 70 வயது பெண்ணும், 11 வயது சிறுவனும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் வந்து இறங்கிய. மூன்று இனந் தெரியாத நபர்களும் தமது வீட்டுக்கு வந்து வெளிநாட்டில் இருக்கும் உங்களது மகளை எங்களுக்கு தெரியும் எனத் தெரிவித்து அவர்களிடம் பேசி தாங்கள் கொண்டு வந்த சோடாவினை வீட்டில் இருந்த பெண்ணுக்கும், அவரது பேரப்பிள்ளைக்கும் கொடுத்துள்ளனர்.

அவர்கள் சோடாவினை அருந்தி மயக்கமுற குறித்த பெண்ணிண் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியினை அபகரித்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென்பதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகாளை சேருநுவர பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.