40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்

விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

சுமார் 40அடி உயரமான வழுக்குமரத்தில் தனது கோஸ்ட்டியுடன் ஏறிய சாமித்தம்பி தவராசா(வயது 40) என்பவரே இவ்விதம் பரிதாபகரமாக மல்லாக்க வீழந்தார்.

 இடுப்பு தரையில் அடிபடவீழ்ந்ததால் பலத்த என்புமுறிவுகள் ஏற்பட்டிருந்தது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

விளையாட்டு மைதானத்தில் ஒரே நேரத்தில் பல வகையான கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக குதூகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. விளையாட்டுவிழா ஆரம்பமான 3.30மணிமுதல் வழுக்குமரம் ஏறும் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தது.

4.30மணியளவில் மைதானத்தில் கிடுகிழைத்தல் தலையணைச்சமர் மற்றும் கல்விச்சாதனையாளர் பாராட்டுவிழா நிகழ்வும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
அச்சமயம் இத்துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேடையிலிருந்த அதிதிகள் அவர் மல்லாக்க வீழ்வதை நேரடியாகக்கண்டிருக்கின்றனர்.


வழுக்குமரத்தைச்சுற்றி பூசியிருந்த கிறீசை வழித்துவழித்து மேல்நோக்கி ஏறிக்கொண்டிருந்தனர். சுமார் 30அடி உயரத்தில் முதலாவதாக தவராசா முன்னேறிக்கொண்டிருந்தார். அப்போது மேலிருந்த கிறீசை வழித்துவிட்டு தான்கட்டிய கயிற்றை பிடித்தபோது கயிறு திடிரென எதிர்பாராதவகையில் அறுந்ததனால் நிலைதடுமாறி கை தவற அவர் மல்லாக்க கீழ்நோக்கழ வீழ்ந்தார். அப்போது கீழே நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் நின்றிருநதனர். அவர்கள் விலக இவர் நேராக தரையிலே வீழந்திருக்கிறார்.

வீழந்தவுடன் துடிதுடித்தார். அங்கு சனம்கூடியது. அதனைப்பார்த்துக்கொண்டிருந்த காரைதீவு பிரதேசபைத்தவிசாளர் கிரு. ஜெயசிறில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குக் கொண்டுசென்றார்.

அங்கு அதிதீவிரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விரைந்து வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் திவீரமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் உயிருக்கு ஆபத்தில்லை என தவிசாளர் ஜெயசிறில் தெரிவித்தார்.

கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரனிடம் கேட்டபோது:

குறித்த வீரரை ஸ்கன்செய்த வைத்திய அதிகாரிகள் உயரத்திலிருந்து வீழ்ந்ததனால் இடதுகால் தொடை எலும்பு முற்றாக உடைந்த அதேவேளை ஏனைய என்புகளும் சிறுசிறு உடைவுகள் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டனர்.

பல்முறிவுகள் என்பில் ஏற்பட்டகாரணத்தினால் அவரை என்புவைத்தியநிபுணர் உள்ள மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைத்தோம். அங்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
தலையில் அடிபடவில்லை. இடுப்பும் அதுசார்ந்த பகுதிகளும் இந்த உள்புமுறிவுகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. எனவே உயிருக்கு ஆபத்தில்லை என்றார்.

- (காரைதீவு  நிருபர் சகா)

val 1

val 2

val 2

val 2

val 2

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.