கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

மாதாந்த நிலுவக் கொடுபனவு உட்பட ஆறு அம்சகோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா உழியர்கள் இன்று திங்கட்கிழமை (02-04-2018) முதல் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிழக்குப் பல்கைலக் கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் காலை வேளை ஒன்று கூடிய கல்விசாரா ஊழியர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளுடன் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மாதாந்த இழப்பீட்டுப்படி 2016 2020 வரையான 5 ஆண்டு காலப்பகுதியில் 100 வீதமாக அதிகரிக்கப்படுதல் என்ற உடன்படிக்கையின் படி 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 வீதத்தாால்இது அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆனால் இது சம்பந்தமான சுற்றுநிரூபம் இதுவரை வெளியிடப்படவில்லை. அந்த உடன்பாட்டின் I(iv) இல் குறிப்பிடப்பட்டமையை மீறி பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்களின் ஓரு சாராருக்கு மட்டும் 15வீத புதிய மாதாந்தக் கொடுப்பணவு (சுற்றுநிரூபம் ப.மா.ஆ இல. 13/2017, 15.07.2017) வழங்கப்பட்டுள்ளது. இக்கொடுப்பனவானது இதுவரை போதனை சாரா ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.உடன்பாட்டின் I (ii) க்கு அமைவாக சம்பள மீளாய்வு 01.01.2017 இலிருந்து வழங்கப்படுவதற்கு பதிலாக 01.01.2016 முதல் மீள சீர்திருத்தப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இதுவரை வழங்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித்திறன் கொடுப்பனவை உடன்பாட்டின் பிரகாரம் மீண்டும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கடன் போதனைசாரா ஊழியர்களுக்கு பாதியளவே வழங்கப்படுகிறது. உடன்பாட்டின் பிரகாரம் சகலருக்கும் சமமமாக 2 மில்லியன் கடன் தொகையை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.சகல பல்கலைக்கழகங்களிலும் திறன்மிக்க காப்புறுதித் திட்டத்தை உருவாக்குவதற்கான செயற்திட்டங்கள் எதனையும் அமுல்படுத்தப்படாமையும், பொருத்தமான ஓய்வூதியத்திட்டத்தை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் உடன்பாட்டின் பிரகாரம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 34 நாட்களாக பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும் உயர்கல்வி அமைச்சோ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

strike 1

strike 1

 

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.