இரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு

இரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர் . 75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்தது. 138 அடி நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெள்ளளோட்டம் விடப்பட்டது.

1942ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வேளையில், ஜப்பான் விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இந்த கப்பல் தீப்பற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்தக் கப்பல் கைவிடப்பட்டது. 1943ம் ஆண்டு இது ஏனைய வள்ளங்களுக்கு இறங்குதுறையாக பயன்படுத்துவதற்கான வகையில் இதனை மூழ்கடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தில் வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் கீழ், மூழ்கியிருந்த இந்தக் கப்பல் 5 மாத நடவடிக்கைகளின் பின்னர், மீட்பதற்கு கடற்ப்படையினரால் முடிந்தது. இதற்கு டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

ship 1

ship 1

ship 1

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.