கல்லடி பாலத்தில் நடைபெறும் சம்பவங்களை அவதானிப்பதற்காக சி.சி.டி.வி கமெரா

கல்லடி பாலத்தில் சி.சி.டி.வி கமெராக்களைப் பொறுத்துவதற்கான நடவடிக்கையை, புதிய மாநகரசபை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் கடமையாக செய்யவேண்டுமென, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கிய இடமாகவும் கேந்திர நிலையமாகவும் கல்லடிப்பாலம் உள்ளதாகவும் அதன் ஊடாக நடைபெறும் சம்பவங்களை அவதானிப்பதற்காகவும் இதனைச் செய்யவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  அண்மைக்காலமாக கல்லடிப் பாலத்தின் ஊடாக தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், அதில் சிலர் தற்கொலையா, கொலையா என்று சந்தேகிக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை சி.சி.டி.வி கமெராக்களைக் பொறுத்துவதன் ஊடாக தடுக்கமுடியும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், எங்காது கடத்தப்படும் வாகனங்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்லடிப் பாலம் ஊடாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் கண்டறியக் கூடிய நிலையை இதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையேற்கும் உறுப்பினர்கள் முதலாவது கையெழுத்தை இந்த நடவடிக்கைக்கு இடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதிகம் வாசித்தவை

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • May 08 , 2018

  எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.