இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் CYBER CRIME பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

இன்றைய உலகில் இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் CYBER CRIME பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று காரைதீவில் நடைபெற்றுள்ளது. இதனை மனித அபிவிருத்தி தாபனம் அம்பாறை மாவட்ட

செயலக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

 

இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் CYBER CRIME
பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மனித அபிவிருத்தி தாபனத்தின் உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் தலைமையில் நேற்று காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு வளவாளராக சட்டத்தரணி சுஹால்ஸ் பிர்தௌஸ் கலந்துகொண்டு விளக்கவுரையாற்றினார்.
அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்.எஸ்.விவேகானந்தராஜா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் யூ.எல். அசாருதீன் ஆகியோரும் பங்கு பற்றுனர்களாக பிரதேச செயலகங்களிலுள்ள சிறுவர் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் முன் பிள்ளை பராய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள்இ உளநல உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இக் கருத்தரங்கானது தற்போது அதிகரித்து காணப்படும் சிறுவர் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்கும் இலத்திரனியல் சாதனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்கள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது தொடர்பாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள்இ சட்ட பாதுகாப்பு அதற்கான ஆதாரங்களை எவ்வாறு எடுப்பது தொடர்பாக சட்டத்தரணி சுஹால்ஸ் பிர்தௌஸ் அவர்களால் விளக்கவுரை வழங்கப்பட்டது.

c 2

c 2

c 2

(காரைதீவு நிருபர் சகா)

 

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.