"ஔவையின் அமுத மொழிகள்" நூல் வெளியீட்டு விழா

கல்லடி பூநொச்சிமுனையைச் சேர்ந்தவரும்,பிரபல சமூகசேவையாளருமான வேலுப்பிள்ளை-சிவபாதசுந்தரம் அவர்களினால் தொகுப்பட்ட "ஔவையின் அமுதமொழிகள்" நூல் வெளியீட்டுவிழா கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில்

கடந்த வெள்ளிக்கிழமை(12.10.2018) காலை 10.00 மணியளவில் கல்லடி இராமகிருஸ்ணமிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷானந்தாஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் "அதிபர் திலகம்" திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை-பாஸ்கரன்,கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் நவரெட்ணம்-வாசுதேவன் ஆகியோர்களும்,கௌரவ அதிதிகளாக கல்வி அபிவிருத்தி சமூக மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் சி.தேவசிங்கன்,கல்லடி உப்போடை பேச்சியம்மன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபைத்தலைவர் ச.சந்திரகுமார்,சிரேஸ்ட ஊடகவியலாளரும்,அரங்கம் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான பூபாலரெத்தினம் சீவகன் ஆகியோர்களும்,சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை கல்வி அதிகாரி சோ.சிவலிங்கம், ஓய்வுநிலை வங்கி முகாமையாளர் க.பாஸ்கரன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தி.சிறிஸ்கந்தராசா,மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் உட்பட பொதுமக்கள்,நலன்விரும்பிகள், பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.

முதலில் அதிதிகளை மாலை அணிவித்து வரவேற்றார்கள்.மங்கல விளக்கேற்றல்,இறைவணக்கம்,தமிழ்மொழி வாழ்த்து,ஆசியுரை,தலைமையுரை,நூல் அறிமுக உரை,அதிதிகள் உரை,சுவாமி விபுலானந்தரின் ஆவணப் படம் திரையிடல்,நூல் பிரதிகள் வழங்குதல், நன்றியுரை என்பன இடம்பெற்றன.

இதன்போது மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 39 பாடசாலைகளுக்கும்,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 30பாடசாலைகளுக்கும் ஔவையின் அமுதமொழிகள் நூல்(ஆங்கில மொழி பெயர்ப்புடன்) சமூகசேவையாளர் வேலுப்பிள்ளை-சிவபாதசுந்தரத்தினால்(கனடா) இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

bo 2

(க.விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.