காத்தான்குடியில் பல்வேறு வீதி அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கீடு

நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள்

பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பெருமுயற்சியில் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் "கம்பரெலிய" கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகளுக்காக ரூபா ஒரு கோடி ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

அந்தவகையில் நூராணிய்யா மையவாடி 1ம் குறுக்கு,2ம் குறுக்கு மற்றும் 3ம் குறுக்கு வீதிகளுக்காக ரூபா 20 இலட்சமும்,புதிய காத்தான்குடி பாய் ஒழுங்கை 1ம் குறுக்கு வீதிக்கு 10 இலட்சமும்,புதிய காத்தான்குடி மத்திய வீதி உள்ளக வீதிகளுக்காக ரூபா 20 இலட்சமும்,புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா உள்ளக வீதிகளுக்கு ரூபா 20 இலட்சமும்,காத்தான்குடி பக்கர் ஒழுங்கைக்கு ரூபா 10 இலட்சமும்,கர்பலா உள்ளக வீதிக்கு ரூபா 20 இலட்சமும்,புதிய காத்தான்குடி அல்றாஜ் ஹாஜியார் வீதிக்கு ரூபா 10 இலட்சமும்,புதிய காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதி உள்ளக வீதிகளுக்கு ரூபா 20 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ் வீதி அபிவிருத்திப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

kp 2

kp 2

kp 2

(ஆதிப் அஹமட் )

அதிகம் வாசித்தவை

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.