அதிபர் மற்றும் மக்கள் வங்கி ஊழியர்களால் சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு

அண்மையில் வௌியான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று (196 புள்ளிகள் பெற்று ) முதன் நிலையில் தெரிவான, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் உன்னிச்சை

6ம் கட்டை (நெடியமடு) பாடசாலை மாணவன் செல்வன் ஜெயராஜ் துஹின் ரறேஷ் எனும் மாணவனை பாராட்டி மகிழ்வித்த நிகழ்வு கடந்த 08ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.பேரானந்தம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வினை மட்டக்களப்பு மக்கள் வங்கி நகரக்கிளை ஒழுங்கு செய்திருந்தது.

இந் நிகழ்வில் சித்தியடைந்த மாணவனால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், மாணவனுக்கு பொன்னாடை அனிவித்து பாராட்டுத் தெரிவித்ததுடன், அவர் பெயரில் ஒருதொகை பணமும் வைப்பிலிடுவதாக வங்கி அதிகாரிகளால் கூறப்பட்டது.

இந் நிகழ்வின்போது பாடசாலை அதிபர் உரையாற்றுகையில், இம்மாணவன் எமது பாடசாலைக்கு மட்டுமல்லாமல் மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பொயரையும் புகழையும் ஈட்டித் தந்துள்ளார். இதற்காக நான் இம் மாணவனுக்கும் அவர் பெற்றோருக்கும் நன்றியினைத் தெரிவிக்கின்றேன். எனத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் வங்கி, உதவி பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன் உரையாற்றுகையில், செல்வன் ஜெயராஜ் துஹின் ரறேஷ் போன்று ஏனைய எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களும் சிறந்தமுறையில் கல்விகற்று நற்பிரஜைகளாக திகழவேண்டும்.

சிறு வயதில் ஊக்கத்துடன் செய்யும் நற்காரியங்கள் அனைத்தும் நம் வாழ்வின் இறுதிவரை சிறந்ததாகவே அமையும் அது கல்வியாக இருக்கலாம், சேமிப்பாக இருக்கலாம் அல்லது உதவிகளாக இருக்கலாம். சிறுவயதில் கல்வி பயிலும்போதே சேமிப்பு எனும் பழக்கத்தினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவை இரண்டும் எமது எதிர்காலத்திற்கு உதவியளிப்பவை. என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் மக்கள் வங்கி, உதவி பிராந்திய முகாமையாளர் கே.கோடீஸ்வரன், நகர கிளை முகாமையாளர் கே.நித்திலன், BPO வீ.சிராணி, எஸ்.சரணியா, கிராம அபிவிருத்தி சங்க தலைவர் க.சபேசன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

u 2

u 2

u 2

u 2

u 2

 

அதிகம் வாசித்தவை

 • Aug 13 , 2017

  அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

 • Apr 16 , 2018

  விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

 • Apr 25 , 2018

  12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

 • Apr 18 , 2018

  2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

 • May 12 , 2018

  இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.