கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த காராத்தே வீரர் பால்ராஜ் அவர்கள்

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் 44ஆவது தேசிய காராத்தே சுற்றுப்போட்டியானது கடந்த செம்ரெம்பர் மாதம் 27,28,29,30,ஆகிய திகதிகளில் கொழும்பு தேசிய உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

கடந்த 2000 ஆண்டு முதல் இன்றுவரையும் கராத்தே கலையில் பல சாதனை மட்டங்களைத் தனதாக்கிக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் ஜே.கே.எம்.ஓ(JKMO)அமைப்பு மீண்டும் இவ்வருடமும் தனது சாதனையை நிலைநாட்டியுள்ளது.

JKMO(ஜப்பான் கராத்தே மகுயோசிக்காய் அமைப்பு)வின் பிரதம போதனாசிரியர் சிகான்.Eng. s.முருகேந்திரன் அவர்களின் கறுப்புப்பட்டி மாணவர்கள்தான் மீண்டும் எமது கிழக்கு மாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

44 ஆவது தேசிய கராத்தே போட்டியில் சிரேஸ்ட மாணவர்களுக்கான தனிக்காட்டா போட்டியில் எஸ்.பால்ராஜ் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்ததோடு மட்டுமல்லாமல் இவர் 2012 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையும் தொடர்ச்சியாக ஏழு(7) தங்கப்பதக்கங்களை வென்ற ஒரேயோரு வீரர் என்ற பெருமையும் எமது மாகாணத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதன்மூலம் தனது ஆசிரியருக்கு "சிறந்த பயிற்றுவிப்பாளர்" என்ற விருது தொடர்ச்சியாக கிடைக்கச் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.இவைதவிர குழுக்காட்டாப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் பெற்று கொண்டதன் மூலம் இவ்வருடத்தின் சிறந்த கராத்தே வீரர் என்ற பட்டத்திற்கான விருதினையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.வீரம் விளைநிலத்தின் வீரரான எஸ்.பால்ராஜ் இவ்விருதினை 2014,2016 ஆண்டுகளிலும் சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

pa 2

pa 2

pa 2

pa 2

(க.விஜயரெத்தினம்)

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • Apr 18 , 2018

    2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.