மட்டு. போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இப்றாலெப்பை மீண்டும் நியமனம் - இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக, வைத்தியக் கலாநிதி எம்.எஸ். இப்றாலெப்பை, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் (13) அவர், தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமைபுரிந்த வைத்தியர் இப்றாலெப்பை, சமீப சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றுச் சென்றிருந்த நிலையில், மீண்டும் அவருக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியர் இப்றாலெப்பையை, ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிப்பாளராக நியமித்ததைக் கண்டித்தும் தற்போதைய பணிப்பாளர் டொக்டர் திருமதி கலாரஞ்சனியே பணிப்பாளராக இருக்க வேண்டுமென வலியுறுத்தியும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஊழியர்கள், நாளைய தினம் (14) காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனரென, ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதாரச் சேவைகள் சங்கத்தின் செயலாளர் பி.பிரபாகரன் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் அனைத்து ஊழியர்களும், இந்தப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதெனத் தீர்மானித்துள்ளதாகவும் இதனால், அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து, இந்தப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.