வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி ; அமைச்சர் ரிஷாட் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வடக்கிலுள்ள சிலாவத்துறை வைத்தியசாலை, கிழக்கில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் தள வைத்தியசாலை ஆகியவற்றிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நிதியை ஒதுக்கி தருமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிடம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளில் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளும் உள்ளடங்குவதாகவும், இதுவரையும் இந்த வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படாததனால், மக்கள் பெரிதும் சிரமப்படுவதாகவும், ஒழுங்கான வசதிகள் இல்லாததனால் தூர இடங்களுக்கு மருத்துவத்திற்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கியம் நிலவுவதாகவும்;, பல சந்தர்ப்பங்களில் இந்தப் பிரதேசங்களில் வாழ்கின்ற நோயாளர்கள் இறப்பினை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும், அமைச்சர் ரிஷாட் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் பீடித்த டெங்கு நோய் கிண்ணியா மக்களை பெரிதும் பாதித்ததுடன் அந்த பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் வைத்தியசாலை போதிய மருத்துவ வசதிகள் இன்மையினால், டெங்கு நோயாளர்கள் உரிய சிகிச்சைகள் கிடைக்காது இறந்தமையையும், மோசமாக பாதிக்கப்பட்டமையையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாட் புத்தளம் மாவட்டத்திலும், இதே நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் அண்மைக் காலத்தில் வலிந்து திணிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்புக்கள் இந்த மக்களை அடிக்கடி உபாதைக்குள்ளாகி வருவதையும் அமைச்சர் தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டினார்.
கடந்தவருடம் புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் சிலாவத்துறை வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் ராஜீத சேனாரட்னவை தாம் அழைத்துச் சென்று வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறை, ஏனைய குறைபாடுகள் பற்றி நேரில் காண்பித்ததையும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்ததையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கடிதத்தில் ஞாபகப்படுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை

  • Apr 16 , 2018

    விளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.

  • Aug 13 , 2017

    அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

  • Apr 25 , 2018

    12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது. 

  • May 12 , 2018

    இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.

  • May 08 , 2018

    எழுந்தமானமாக நுண்கடன் வழங்குவதால் தேவையற்ற உயிரிழப்புகளும் சமுக சீர்கேடுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதனை இன்னமும் அனுமதிக்கமுடியாது. எனவே இனிமேல் காரைதீவுக்குள் எமது சிபார்சின்றி யாரும் நுண்கடன் வழங்கமுடியாது.